×

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை

வேலூர்: வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஜோஸ் ஆலுக்காஸ் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காட்சிக்கு வைக்கப்பட்ட வைரம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் பதிவாகாதபடி மறைத்துவிட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளையும் கொள்ளையர்கள் அள்ளி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் இன்று காலை கடையை திறந்த போது தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டி.ஐ.ஜி தலைமையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது 30 கிலோ தங்கம் கொள்ளை போனதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வைர நகைகள் எவ்வளவு கொள்ளை போயுள்ளது என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக தினமும் விற்பனையை முடித்த பிறகு லாக்கரில் பூட்டிவிட்டு செல்வது தான் வழக்கம். ஆனால் நேற்று இரவு அவ்வாறு செய்யாமல் காட்சிப்படுத்தும் இடத்திலேயே வைத்திருந்ததும் சந்தேகத்தை எழுப்பி இருப்பதால் நகை கடை ஊழியர்களிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Jose ,Alucas ,Vellore , Gold jewelry, robbery
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...