×

டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று (15.12.2021) டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

16.122021 முதல் 19.12.2021 வரை: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அகரம் சீகூர் (பெரம்பலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு) தலா 3. தென்பரநாடு (திருச்சி), மரக்காணம் (விழுப்புரம்), புவனகிரி (கடலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை). அமராவதி அணை (திருப்பூர்), பர்லியார் (பீலகிரி) தலா 2, குன்னூர் பி.டி.ஓ (நீலகிரி), செட்டிகுளம் (பெரம்பலூர்), திருப்பத்தூர் (வெகங்கை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஓட்டனஞ்சத்திரம் (திண்டுக்கல்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), வேப்பூர் (கடலூர்), பாம்பன் (ராமநாதபுரம்), வானூர். (விழுப்புரம்), குன்னூர் (நீலகிரி), வீரகனூர் (சேலம்). திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கடல்குடி (நூத்துக்குடி). விளாத்திகுளம் (தாத்துக்குடி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), ராமேஸ்வரம் (சேலம்), கெட்டி (நீலகிரி), தொழுதார் (கடலூர்). (ராமநாதபுரம்), ஏற்காடு (சேலம்), கும்பகோணம் (தஞ்சாவூர்), வல்லம் (விழுப்புரம்), கடவறார் (கள்ளக்குறிச்சி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

15.12.2021,19.12.2021: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

15.12.2021,.16.12.2021: இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேசுத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Tags : Delta Divids ,Karaikal ,Pudukotta ,Chennai ,Weather Centre , Weather Center
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...