×

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவரை துளையிட்டு வைர நகைகள் கொள்ளை

வேலூர்: வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கட்டட சுவரை துளையிட்டு வைர நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜோஸ் ஆலுக்காஸ் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு வைர நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பியது. கொள்ளையை அடுத்து ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Vellore Jose ,Alukas , Attempted robbery by digging a hole in the wall of Vellore Jose Alucas jewelry store
× RELATED கோவை நகைக்கடை கொள்ளையன் சிக்கியது...