×

ஐம்மு-காஷ்மீர் மாநிலம் சுரன்கோட் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை

காஷ்மீர்: காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம் சுரன்கோட் பகுதியில் நடந்த துப்பாக்கிச சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம் சுரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படை வீரர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படை வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொள்ளப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்பு படை வீரர்கள் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் பங்கரவாதிகள் யாரும் பதுங்கி உள்ளார்களா என பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : Aimmu-Kashmir ,Surankot , Aimmu, security force, gangster, gunfight
× RELATED விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத...