×

488 - 354 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே தோன்றியவையா?: ஜம்மு காஷ்மீரில் 7 புதிய புதைபடிம பாறைகள் கண்டுபிடிப்பு..!!

குல்கா: ஜம்மு காஷ்மீரின் குல்கா மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பலகோடி ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிம பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் குல்கா மாவட்டத்தில் பிரசித்திபெற்ற அகர்பால் அருவி இருக்கிறது. இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த புதிய பாதைபடிம பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு புதைப்படிம பாறைகள் இருப்பதை கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் மன்சூர் அகமது, ரஃப் அஸ்மா என்ற உள்ளூர் பள்ளி ஆசிரியர்கள் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தனர். அதனை தொடர்ந்து இங்கு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது மேலும் 7 புதிய புதைபடிம பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் சுமார் 488ல் இருந்து 354 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியதாக இருக்க வேண்டும் என்று அகழ்வாய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பாறைகள் ஆர்டோவிசியன் எனப்படும் முதுகெலும்பில்லா உயிர்கள் தோன்றிய காலத்திற்கும், பேரழிவில் இருந்து உயிரினங்கள் தப்பித்த காலமான டொவேணியன் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி இருக்கலாம் என்று அகழ்வாய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த புதைப்படிம பாறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கார்பன் டேட்டிங் எனப்படும் காலத்தை கண்டறிதல் ஆய்வு நடத்த ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்.


Tags : Jammu ,Kashmir , Jammu and Kashmir, Fossil Rocks
× RELATED அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து...