×

பண்டிகை காலத்தில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு!: பொங்கலை முன்னிட்டு அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது..!!

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் செல்ல இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை, அடுத்தாண்டு ஜனவரி 14ல் கொண்டாடப்பட உள்ளது. இது, போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் நடக்கும் விழாவாக இருப்பதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வர். அதற்கு வசதியாக பெரும்பாலான மக்கள் பேருந்துகளில் தான் செல்ல திட்டமிடுவர். இதனால் மக்களின் நலன் கருதி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கு முதற்கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. முக்கிய ஊர்கள் மற்றும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு மட்டும் செல்பவர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு, திருப்பதிக்கு செல்லவும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு கேட்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 044 49076316 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Tags : Pongala , Pongal, hometown, bus, booking
× RELATED காணும் பொங்கலை முன்னிட்டு...