×

தென்னாப்பிரிக்காவை காட்டிலும் வேகம்: இங்கிலாந்தில் 817 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: மாத இறுதியில் 60 ஆயிரமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை

லண்டன்: இங்கிலாந்தில் ஒமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. மேலும் 249 ஒமிக்ரான் பாதிப்புக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த எண்ணிக்கை 817ஆக அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கிய ஒமிக்ரான் வகை கொரோனா பல்வேறு நாடுகளிலும் பரவி வருகின்றது.  குறிப்பாக ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இங்கிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தென்னாப்பிரிக்காவை காட்டிலும் இங்கிலாந்தில் ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் புதிதாக 50ஆயிரம் பேர் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டனர்.

மேலும் 148 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் மேலும் 249 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பதை சுகாதார துறை உறுதி  செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 817ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக  பேராசிரியர் ஜான் எட்மண்ட்ஸ் கூறுகையில், ‘தென்னாப்பிரிக்காவை காட்டிலும் இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவக்கூடும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அதிகபட்சமாக ஒமிக்ரான் வகை கொரோனாவினால் சுமார் 60ஆயிரம் பேர் பாதிக்கப்படலாம். மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை யாரும் விரும்பவில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக நாம் இதனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்’ என்றார்.


Tags : South Africa ,UK , Omigron, vulnerability, warning
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...