×

பயணிகளிடம் கனிவாக நடக்க டிரைவர், கண்டக்டர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறையின் செயலாளர் கோபால் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் இளங்கோவன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் பேருந்தின் வசூல் வருவாயை தவிர்த்து பிற இனங்களில் வருவாய் ஈட்டக்கூடிய வழிமுறைகளை ஆய்வு செய்யவும், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, அதன்மூலம் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கவும், பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்தவும் பயணிகளுக்கு கூடுதல் விவரங்களை தரவும், பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பயணம் நன்முறையில் இருக்கும் வகையில் பணிபுரியவும் அறிவுரைகள் வழங்கினார்.

 பயணம் செய்யும் பயணிகளின் குறைகளை நீக்க, புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக சரி செய்ய வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இக்கருத்துகளை அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்திட உத்தரவிட்டார்.

Tags : Department of Transportation , Walk kindly to passengers Department of Transportation instruction to driver, conductors
× RELATED வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை