×

பொதுப்பணித்துறை, காவல்துறை சார்பில் தக்கலையில் இருந்து குமாரகோவிலுக்கு காவடி: இறை நம்பிக்கை கொண்ட பாரம்பரிய நிகழ்ச்சி

குமாரபுரம்: தக்கலையில் இருந்து குமாரகோவிலுக்கு பொதுப்பணித்துறை, காவல்துறை சார்பில் காவடிகள் எடுத்து செல்லப்பட்டன. இதுபோல நேர்த்திக்கடன் தீர்க்க பொதுமக்களும் விதவிதமான காவடிகளை சுமந்து சென்றனர். திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சியின்போது, நாடு செழிப்பாக இருக்கவும், மாதம் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் செழித்து, மக்கள் பஞ்சம், பட்டினி இல்லாமல் வாழவும், நாட்டில் வாழும் மக்களுக்கிடையே சண்டை, சச்சரவின்றி நிம்மதியாக வாழவும், இறைவனை வேண்டி பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை சார்பில் குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து செல்லும் வழக்கம் இருந்து வந்தது. இதுபோல் பொதுமக்களும் நோய், நொடியின்றி உடல் ஆரோக்கியத்திற்கு இறைவனை வேண்டிக்கொள்ளும் நேர்த்திக்கடனை தீர்ப்பதற்காக, கடும் விரதம் இருந்து காவடிகளை எடுத்து செல்வது வழக்கம்.

இறை நம்பிக்கை கொண்ட இப்பாரம்பரிய நிகழ்ச்சி தொன்றுதொட்டு இன்று வரை, ஆண்டுதோறும் கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டின் கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையான இன்று தக்கலை பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு சார்பில் 3 புஷ்ப காவடிகள் மற்றும் ஒரு பால்குடத்ைத அதிகாரிகள் எடுத்து ெசன்றனர். பொதுப்பணித்துறை உதவியாளர்கள் கஜேந்திரன், மோகன்தாஸ், கணேஷ், கிருஷ்ணன் ஆகியோர் காவடி மற்றும் பால்குடத்ைத எடுத்து சென்றனர். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் வசந்தி, உதவி ெசயற்ெபாறியாளர்கள் அருள்சன் பிரைட், கதிரவன், சதீஷ், வைஷ்ணவி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல தக்கலை காவல் நிலையம் சார்பிலும் 3 புஷ்ப காவடிகள் மற்றும் ஒரு பால்குடத்தை போலீசார் எடுத்து சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பத்மனாபபுரம் நீதிமன்ற நீதிபதி தீனதயாளன், தக்கலை டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். மேலும் இந்த இரு நிகழ்வுகளிலும், மத்திய அரசு வக்கீல் வேலுதாஸ், திமுக பத்மனாபுரம் நகர செயலாளர் மணி உள்ளிட்டோரும் கொண்டனர். காவடிகள் தக்கலையை நகர்வலம் வந்து வெள்ளரி ஏலா, அரண்மனை சாலை, தேசிய நெடுஞ்சாலை வழியாக குமாரகோவில் சென்றன. மேலும் பக்தர்கள் சார்பில் பத்மநாபபுரம், முட்டைக்காடு, குமாரபுரம், வெட்டிக்கோணம், புலியூர்க்குறிச்சி, இரணியல்கோணம், தென்கரை, காரவிளை, வழிக்கலாம்பாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேல், புஷ்பம், பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு காவடிகள் மற்றும் பறக்கும் காவடிகளும் எடுத்து செல்லப்பட்டன.

காவடிகள் குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலை இன்று மதியம் சென்றடைந்ததும், முதலில் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை சார்பில் கொண்டு செல்லப்பட்ட பொருட்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் காவடியாக கொண்டு சென்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ேமலும் சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

Tags : Dakar ,Kumarakovil ,Gavadi , Kavadi from Thakkala to Kumarakom on behalf of the Public Works and Police: A traditional event with faith in God
× RELATED நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சொந்த...