×

வாடிக்கையாளர்களை கவர புது புயற்சி!: வியட்நாம் ஹோட்டலில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை...ரசித்து ருசிக்கும் உணவு பிரியர்கள்..!!

ஹனோய்: வியட்நாமில், வாடிக்‍கையாளர்களை கவரும் வகையில், ஹோட்டல் ஒன்றில் தங்கம் முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில், கடந்த இரு வாரங்களுக்‍கு முன்பு புதிய உணவகம் திறக்‍கப்பட்டது. இந்த ஹோட்டலில் வாடிக்‍கையாளர்களை கவரும் வகையில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை அப்படியே அடுப்பில் வைத்து சமைப்பதை வாடிக்‍கையாளர்கள் நேரில் காணவும், அதனை படம்பிடிக்கவும் வகையில் அனுமதிக்‍கப்படுகின்றனர்.

அண்மையில் வியட்நாம் அமைச்சர் டோம் லாம், லண்டனில் இத்தகைய இறைச்சியை சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதை தனது சொந்த நாட்டில் செயல்படுத்தியதாக உணவகத்தின் உரிமையாளர் என்குயன் ஹூ டங் பெருமையுடன் தெரிவித்துள்ளார். தங்கம் முலாம் பூசப்பட்ட இறைச்சியின் விலை, நபர் ஒருவருக்‍கு இந்திய ரூபாயில் 3,300 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாடிக்‍கையாளர்கள் ஆர்வமுடன் வாங்கி சுவைத்து வருகின்றனர்.

Tags : Vietnam , Vietnam, hotel, gold plating, meat
× RELATED வியட்நாம் நாட்டில் நிதி மோசடி...