×

வறண்டு கிடக்கும் கூராங்குளம் கண்மாய்-தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

திருமங்கலம் : மதுரை திருமங்கலம் தாலுகாவில் செங்குளம், மறவன்குளம், குதிரைசாரிகுளம், சேதுராயன்குளம், பொன்னமங்கலம், உரப்பனூர், வாகைக்குளம், பொக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன.ஆனால், இந்த தாலுகாவில் பெரிய கண்மாய்களில் ஒன்றான கூராங்குளம் கண்மாயில் மட்டும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. கீழக்கோட்டை பஞ்சாயத்து லட்சுமியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கூராங்குளம் கண்மாய், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாசன கண்மாய்களில் ஒன்றாக திகழ்ந்தது. சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கண்மாய் மூலமாக கீழக்கோட்டை, லட்சுமியாபுரம், மல்லம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் வரத்து கால்வாய் ஆக்கிரமைப்பு காரணமாக தற்போது கண்மாய்தண்ணீர் இன்றி காட்சிதருகிறது. அருகேயுள்ள வடகரை மற்றும் விடத்தகுளம் கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் கூராக்குளம் கண்மாயில் மட்டும் கிடங்கில் தண்ணீர்கிடப்பது விவசாயிகளிடம் வேதனையை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து திமுக மாவட்ட துணைஅமைப்பாளர் மற்றும் கீழக்கோட்டை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தனுஷ்கோடி கூறுகையில், `` எங்கள் கண்மாய்க்கு திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் இருந்து கால்வாய் மூலமாக தண்ணீர் வரும். எந்த கண்மாயிலும் இல்லாத வகையில் இரண்டு மறுகால்களை கொண்டது கூராங்குளம் கண்மாய். கால்வாயை ஆக்கிரமித்து சிலர் மூடியதால் தற்போது கால்வாய் மூலமாக தண்ணீர்வருவது கிடையாது. சுற்றுவட்டார உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பியுள்ள நிலையில் கூராங்குளம் கண்மாய் மட்டும் வறண்டு போய் உள்ளது’’ என்றார்.



Tags : Thirumangalam: Chengulam, Maravankulam, Kudiraicarikulam, Chethurayankulam, Ponnamangalam, Urappanur in Madurai Thirumangalam taluka
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...