×

மாமல்லபுரத்தில் எம்பி ஜெகத்ரட்சகனின் பீச் ரிசார்ட் திறப்பு விழா: அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பீச் ரிசார்ட் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். மாமல்லபுரத்தில், இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கால்டன் சமுத்திரா என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய பீச் ரிசார்ட் கட்டும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது, ரிசார்ட் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் இருந்தது.

இதையடுத்து, ஜெகத்ரட்சகனின் முக்கிய உறவினர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் முன்னிலையில் யாகம் வளர்த்து நேற்று காலை பீச் ரிசார்ட் திறக்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், காந்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, செஞ்சி மஸ்தான், மதிவேந்தன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Tags : Jagathratsakan ,Beach Resort Opening Ceremony ,Mamallapuram , Of Mamallapuram MP Jegathratsakan Beach Resort Opening Ceremony: Participation of Ministers, MPs
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...