×

வில்லியம்சுக்கு 2 மாதம் ஓய்வு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட்  அணி நேற்று தாயகம் திரும்பியது. அப்போது பேசிய நியூசி. பயிற்சியாளர்  கேரி ஸ்டீட்,  ‘முழங்கை காயம் காரணமாக  வில்லியம்சன்  அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், அணிக்காக சமாளித்து விளையாடினார். ஆடாமல் இருப்பதை அவர் விரும்புவதில்லை என்றாலும், மருத்துவர்கள் அவரை 8 முதல் 9 வாரங்கள் ஓய்வெடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.   வில்லியம்சன் ஏற்கனவே இதுபோல் பல வாரங்கள் ஓய்வில் இருந்துள்ளார்’ என்றார்.

 காயம் காரணமாக அவதிப்பட்ட வில்லியம்சன்,  இந்தியாவுடனான 2வது டெஸ்ட்டில்  விளையாடவில்லை. இந்த கட்டாய ஓய்வு காரணமாக  வங்கதேசத்துக்கு எதிராக நியூசி.யில் நடைபெறும் 2 டெஸ்ட்களில் அவர் விளையாடும் வாய்ப்பு இல்லை. பிப்ரவரி, மார்ச் மாதங்களில்  தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் வில்லியம்சன் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Tags : Williams , To Williams 2 month rest
× RELATED சர்வதேச விண்வெளி மையத்தை மீண்டும்...