×

13 வகை மளிகை பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சருடன் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை

சென்னை: 13 வகை மளிகை பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சருடன் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று உள்ளார். தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 13 வகையான பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன.  
கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் மே 31 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்த அரசு, நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்தில் முழு ஊரடங்கை ஜூன் 7 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

The post 13 வகை மளிகை பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சருடன் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Cooperation Minister ,I. Periyasamy ,Chief Minister ,Chennai ,Cooperatives ,Minister ,Dinakaran ,
× RELATED கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு...