×

நல்ல செய்தி!: சென்னையில் குறைந்தது தங்கம் விலை..சவரனுக்கு ரூ.184 சரிந்து, ரூ.37,080க்கு விற்பனை..இல்லத்தரசிகள் குதூகலம்..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிவை கண்டிருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,635க்கும், சவரன் ரூ.37,080க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வை கண்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,637க்கும், சவரன் ரூ.37,096க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.77.30க்கு விற்பனையானது. 
இந்நிலையில், சென்னையில் தொடர் அதிகரிப்பில் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்திருப்பது நகை பிரியர்களை பெருமூச்சு விட செய்திருக்கிறது. இந்த வருடம் தொடக்கம் முதலே தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ஒருநாள் விலை சரிவதும், மறுநாளே ஏறுமுகத்தை சந்திப்பதும் தங்கத்தின் வேலையாக இருந்தது. தங்கம் வாங்கவே வேண்டாம் என்ற மனநிலைக்கு அதன் விலை உயர்வு காணப்பட்டது. இருப்பினும் தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறைந்தபாடில்லை. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே அதன் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,000ஐ  தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்து, ரூ.34,000க்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மார்ச் 31ம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்திருப்பது நகை பிரியர்களை நிம்மதியடைய செய்திருக்கிறது. 

The post நல்ல செய்தி!: சென்னையில் குறைந்தது தங்கம் விலை..சவரனுக்கு ரூ.184 சரிந்து, ரூ.37,080க்கு விற்பனை..இல்லத்தரசிகள் குதூகலம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sawaran ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...