×

மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் ஆகிறார் மோகன்லால்

திருவனந்தபுரம்: மலையாள நடிகர், நடிகைகளுக்காக ‘அம்மா’ என்ற பெயரில் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கடந்த 2018ல் நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், வரும் 19ம் தேதி மீண்டும் சங்க தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் ெதாடங்கியது. தலைவர் பதவிக்கு மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு மனு தாக்கல் செய்தனர். மனுக்களை வாபஸ் பெறும் தேதி முடிந்த நிலையில், நேற்று முன் தினம் மனுக்கள் மீதான  பரிசீலனை நடந்தது.

இதில் தலைவர் பதவிக்கும், பொதுச்செயலாளர் பதவிக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்ைல. இதையடுத்து தலைவராக மீண்டும் மோகன்லால் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல், பொதுச்செயலாளராக இடைவேளை பாபுவும் ேபாட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். மற்ற பதவிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.

Tags : Mohanlal ,President ,Malayalam Actors Association , Malayalam actor, leader, Mohanlal
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...