×

கோவாக்சின் மருந்தை தயாரிக்க மராட்டிய மருந்து நிறுவனத்திற்கு அனுமதி!: தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை..!!

மும்பை: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், கோவாக்சின் மருந்தை தயாரிக்க மராட்டியத்தில் உள்ள எச்.பி.பி.சி.எல். நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. போதிய தடுப்பூசி இருப்பு இல்லாததால் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறுத்தி வருகின்றனர். தடுப்பூசி விநியோகத்தில் பாரபட்சம் உள்ளதாக நீதிமன்றங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனால் நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ள மத்திய அரசு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி மருந்தை மறு உற்பத்தி செய்ய மும்பையில் உள்ள HaffKine பயோ பர்மா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. 
ஆண்டு ஒன்றுக்கு 22.8 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக HaffKine நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியர்களிடையே பேசிய அவர், கோவாக்சின் மருந்தினை தயாரித்து வழங்க தயாராக இருப்பதாக திட்ட அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் அளித்து இருந்தோம். உரிய நிதி கிடைத்தால் தயாரிப்பை தொடங்கலாம் என்று கூறி இருந்தோம். இந்நிலையில் அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. 
கோவாக்சினை தயாரிப்பது குறித்து தற்போது பாரத் பயோடெக்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இந்த பணிகள் அனைத்தும் நடைபெற்று முடிந்த உடன் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி மருந்து தயாரிப்பு பணி நடைபெறும் என்று குறிப்பிட்டார். முழு வீச்சில் கோவாக்சின் தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு 65 கோடி ரூபாயும், மராட்டிய அரசு 93 கோடி ரூபாய் நிதியும் வழங்கியிருப்பதாக சந்தீப் ரத்தோர் கூறியிருக்கிறார். தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஆலோசித்து வருவதாக கூறியிருக்கும் சந்தீப், அடுத்த 8 மாதங்களில் தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறியிருக்கிறார். 

The post கோவாக்சின் மருந்தை தயாரிக்க மராட்டிய மருந்து நிறுவனத்திற்கு அனுமதி!: தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Maratha Pharmaceutical Company ,Covaxin ,Central Govt ,MUMBAI ,HPBCL ,Maharashtra ,Maratha Pharmaceuticals Company ,Govt ,Dinakaran ,
× RELATED தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!!