×

ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கிட்டேன்: பீதியால் இங்கிலாந்து பிரதமர் உஷார்

லண்டன்: இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருவதால், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கட்டாய பி.சி.ஆர் சோதனை மற்றும் சுய தனிமையில் இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ளதால் பொதுமக்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

ஒமிக்ரான் தொற்று பாதித்தாலும் சரி, பாதிக்காவிட்டாலும் சரி மக்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்’ என்றார். இந்நிலையில், நேற்று அவர் பூஸ்டர் தடுப்பூசியை தானும் போட்டுக் கொண்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘நான் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். உருமாற்றமடைந்த கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க இந்த பூஸ்டர் தடுப்பூசி உதவும்’ என்று தெரிவித்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் படாதபாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : UK ,Ushar , I was vaccinated with a booster as Omigran spreads: UK Prime Minister Usher in panic
× RELATED ஜூலை 4ல் பிரிட்டன் பொதுத்தேர்தல்: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு