×

இந்தியாவில் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்; கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று உறுதி..! ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

பெங்களூரு: இந்தியாவிலும் பரவியது ஒமிக்ரான் வைரஸ், கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே டெல்டா, பீட்டா, காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. இதற்கிடையில், தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது.

 ‘ஒமிக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.  

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள 2 பேரோடு தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள 2 பேரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரில் ஒருவருக்கு 66 வயதும், மற்றொருவருக்கு 46 வயது. 29 நாடுகளில், உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.

Tags : India ,Karnataka ,Union Health Department , Omigron virus enters India; 2 infected in Karnataka confirmed ..! Union Health Department Notice
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...