தமிழகம் மாளிகை பூங்காவில் புல் மைதானம் சீரமைப்பு பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி தமிழகம் மாளிகை பூங்காவில் உள்ள புல் மைதானத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். அதேபோல், சிலர் தமிழகம் மாளிகை பூங்காவிற்கும் செல்கின்றனர். தற்போது, முதல் சீசனுக்காக அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பூங்காக்களிலும் விதைப்பு பணிகள் மற்றும் நாற்று உற்பத்தியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க, ஊட்டியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பூங்காக்களில் உள்ள புல் மைதானங்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. மேலும், புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், புல் மைதானங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் மற்றும் சிறிய புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழகம் மாளிகையில் உள்ள பெரிய புல் மைதானத்தையும் ஊழியர்கள் சமன் செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More