மழையால் பாதிக்கப்பட்ட சென்னை செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்றும் ஆய்வு

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட சென்னை செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டார். சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் நடைபெறும் மழைக்கால மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவிட்டு தற்போது அந்த பகுதி மக்களுக்கு மழைக்கால நிவாரணம் மற்றும் உணவு வழங்கி வருகிறார். இந்த பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த பகுதியில் தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்காக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: