×

தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு இந்தியா டுடே வழங்கிய மூன்று விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (29.11.2021) தலைமைச் செயலகத்தில், சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் சந்தித்து, டெல்லியில் 12.11.2021 அன்று நடைபெற்ற இந்தியா டுடே சுற்றுலா மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சிறந்த மலைகளுக்கான வகைப்பாடு பிரிவில் குன்னூருக்கு வழங்கப்பட்ட முதலிடத்திற்கான விருது, சிறந்த விழாவிற்காக தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட முதலிடத்திற்கான விருது, இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகள் அமையப்பெற்ற சாலைக்காக கொல்லிமலைக்கு வழங்கப்பட்ட இரண்டாம் இடத்திற்கான விருது, ஆகிய மூன்று விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்தியா டுடே சுற்றுலா கருத்துக்கணிப்பு மற்றும் விருதுகள் 2021-க்காக இந்தியாவின் பிரபல சுற்றுலாத்தலங்களை தேர்வு செய்ய இந்தியா டுடே குழுமம் நாடு தழுவிய வாக்கெடுப்பை நடத்தியது. பல்வேறு மாநிலங்கள் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இதற்குப் பரிந்துரைத்தன. பின்னர் அவை பல் ஊடகம் (Multi Media) வாயிலாக வெளியிடப்பட்டன. இறுதி முடிவுகள் கணக்கெடுப்பின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதன் அடிப்படையில், டெல்லியில் 12.11.2021 அன்று நடைபெற்ற இந்தியா டுடே சுற்றுலா மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில், ஒன்றிய பண்பாடு, சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அவர்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சிறந்த மலைகளுக்கான வகைப்பாடு பிரிவில், நீலகிரி மாவட்டத்தின் குன்னூருக்கு முதலிடத்திற்கான விருதினையும், விழாப் பிரிவில், சிறந்த விழாவாக தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகைக்கு முதலிடத்திற்கான விருதினையும், இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகள் அமையப்பெற்ற சாலைக்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு இரண்டாம் இடத்திற்கான விருதினையும் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : India ,Tamil Nadu Tourism Sector ,Stalin ,Minister ,Vidavenantan , Department of Tourism
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...