சபரிமலை தரிசனம் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வேண்டாம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 0  2 டோஸ் தடுப்பூசி அல்லது கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் தேவையாகும். இதற்கு முன்னர் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. அந்த உத்தரவில், ‘சபரிமலைக்கு பெற்றோர் அல்லது உறவினர்களுடன் வரும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து அழைத்து செல்ல வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More