×

கனமழை தொடர்வதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னை: கனமழை தொடர்வதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 7,720 கனஅடி நீர்வரத்து 32.63 அடி உயரத்தை எட்டி 73.88% நிரம்பியது. சோழவரம் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 1263 கனஅடி, நீர்மட்டம் 18.86 அடியாகவும், 75.12% நிரம்பியது, 15 செ.மீ மழை பதிவானது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 2,633 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர்மட்டம் 18.67 அடியை எட்டி 83.18% நிரம்பியுள்ளது. 11 செ.மீ மழை பதிவானது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 5,900 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர்மட்டம் 21.13 அடியாகவும், 79.29% நிரம்பியது. மழையானது 12 செ.மீ பதிவானது. வீராணம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,285 கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 8.50 அடியாகவும், 65.11%ஆக நிரம்பியது. மழை 8 செ.மீ பதிவானது. திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது.

மதுராந்தகம்: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 262 ஏரிகளும் 6 ஆண்டுக்கு பின் முழு கொள்ளளவை எட்டியது. தொடர் கனமழை காரணமாக 6 ஆண்டுகளுக்கு பின் அனைத்து ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

Tags : Chennai , lake
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...