×

சீனாவின் பிடியில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம்: இந்தியாவின் பூகோளநலனுக்கு ஆபத்து: வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக பொது ெசயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:   அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டி, சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு 269 ஹெக்டேர் நிலத்தையும் கையகப்படுத்தி சீனாவுக்கு வழங்கிட இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை’ திட்டத்திற்கு முக்கிய துறைமுகமாக இருக்கும் என்பதால், இதன் மூலம் சீனாவின் ராணுவ தளமாக இப்பகுதி மாறிவிடும். கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.ஈழத்தில் தமிழ்மக்களை கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு துணை நின்ற சீனா, தமிழ்நாட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்பகுதியைக் கைப்பற்றிக் கொள்வதும், அங்கே ராணுவ துருப்புகளை நிறுத்தவும் துணிந்தால் தமிழ்நாட்டிற்கும் கேடு விளையும். எனவே ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்….

The post சீனாவின் பிடியில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம்: இந்தியாவின் பூகோளநலனுக்கு ஆபத்து: வைகோ அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Ambantota port ,China ,India ,VICO ,Chennai ,Madhyamik General Secretary ,Vaiko ,Sri Lanka ,
× RELATED பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கண்டனம்