×

யோகா, இயற்கை மருத்துவம்; பிஎன்ஒய்எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.!

சென்னை: தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2021-2022-ஆம் ஆண்டிற்கு பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள், மேல்நிலைப் பள்ளி தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து, இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 03.11.2021 அன்று முதல் வரவேற்கப்பட்டன.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை எங்களது அலுவலக வலைதளமான “www.tnhealth.tn.gov.in ” னிலிருந்து பதிவிறக்கம் செய்ய மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாள் 25.11.2021-னை 07.12.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட பி.என்.ஒய்.எஸ், படிப்பிற்கான அரசு மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் / சிறுபான்மையினரற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, பொது மற்றும் சிறப்பு விண்ணப்ப பதிவிறக்கம் மற்றும் அவற்றின் கட்டணம், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், சிறப்பு பிரிவினர், அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு “www.tnhealth.tn.gov.in ”  என்ற வலைதளத்தை தொடர்புக் கொள்ளலாம்.      

* விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள் 07.12.2021 மாலை 05.00 மணி வரை    

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ, நேரில் சமர்ப்பிக்கவோ கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள்    07.12.2021 மாலை 05.30 மணி வரை

Tags : PNYS , Yoga, naturopathy; Extension of time to apply for PNYS medical degree!
× RELATED அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும்...