சென்னையில் வரும் 29ம் தேதி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி)  தென்சென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் நிறுவனத்தின் 19ம் ஆண்டு தொடக்க நாளான வரும் 29ம் தேதி தென்சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் முன்பும் காலை 9 மணி முதல் 9.50 வரை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு டாஸ்மாக் பணியாளர்களிடம் தீவிர பிரசாரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் பணியாளர்களின் பணி பாதுகாப்பு சமூக விரோதிகளிடம் இருந்து காத்திட வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோருவது, தென்சென்னை  மாவட்டத்தில் நீண்டகாலமாக குடோனில் பணியாற்றும் மற்றும் நீக்கத்தில் உள்ள பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

More