×

விரிஞ்சிபுரம் பகுதியில் குப்பைகளை பாலாற்றில் கொட்டும் ஊழியர்கள்-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பாலாற்றில் குப்பைகளை கொட்டுவது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஊராட்சி பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் குப்பைகளை சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் செல்கிறது. இந்நிலையில் பாலாற்று வெள்ளமானது விரிஞ்சிபுரம் வழியாக வேலூர் நோக்கி பாய்கிறது. விரிஞ்சிபுரம் ஊராட்சியில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் ஊரில் சேமித்த குப்பைகளை வண்டியோடு கொண்டு வந்து பாலாற்று வெள்ளத்தில் நேற்று கொட்டினர்.  இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது: விரிஞ்சிபுரம் ஊராட்சியில் வார்டுகளில் சேகரிப்படும் பிளாஸ்டிக், வீட்டுக்கழிவுகள் போன்ற குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அப்படியே நேரடியாக கொண்டு வந்து பாலாற்றில் கொட்டி வருகின்றனர்.

இதனால் நீர் மாசடையும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது பாலாற்றில் வெள்ளம் வருவதால் நாங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் உள்ளோம். ஆனால் இந்தகையை செயல் எங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே பாலாறு பல்வேறு காரணிகளால் அழிந்து வருகிறது. இதுபோன்ற செயலால் மேலும் பாலாறு அழிவை நோக்கி செல்கிறது.  குறிப்பாக இதுபோன்ற செயலை தடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே இச்செயலில் ஈடுபடுவது ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரித்து விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : Virinjipuram , Vellore: The dumping of rubbish in the Virinjipuram lake next to Vellore has caused public discontent. In Vellore district
× RELATED விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளத்தால்...