×

ராணுவ அதிகாரி ஆவதே லட்சியம்: பழனியின் மகன் சபதம்

புதுடெல்லி: தனது கணவர் பழனியின் வீரத்துக்காக ஜனாதிபயிடம் இருந்து வீர் சக்ரா விருது பெற்ற பிறகு, அவருடைய மனைவி வானதி தேவி  அளித்த பேட்டி: இந்த விருது எனது கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகவும், அவருடைய தியாகத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் கருதுகிறேன். தமிழகத்தின் கடைகோடியில் இருந்த ஒருவர், நாட்டுக்காக என்ன செய்தார் என்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனது கணவரால் நானும், எனது குழந்தைகளும் தலைநிமிர்ந்து இருக்கிறோம். ராணுவத்தில் அங்கீகாரம் பெற எனது கணவர் அதிக கஷ்டங்களை அனுபவித்து உள்ளார். அவரை போன்று ராணுவத்தில் சேர சரியான வழிகாட்டுதல் இல்லாதவர்களை ராணுவத்தில் சேர்த்தார். அவருடைய தம்பியும் ராணுவத்தில் உள்ளார்.

‘உனக்கு வழிகாட்டியாக இருக்கிறேன். நீ அதிகாரியாக ராணுவத்தில் பொறுப்பேற்க வேண்டும். உனக்கு நான் சல்யூட் அடிக்க வேண்டும்,’ என எங்கள் மகனிடம் கூறி வந்தார். எனது மகனின் இலட்சியமே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார். பழனியின் மகன் பிரசன்னா கூறுகையில், ‘‘நான் 7ம் வகுப்பு படிக் கிறேன். எனது தந்தையின் விருப்பப்படி ராணுவத்தில் அதிகாரியாக வேண்டும் என்பதே எனது லட்சியம். எனது தந்தையை விட உயர்ந்த பொறுப்பில் ராணுவத்தில் பணிபுரிவேன்’’ என்றார்.

Tags : Palani , Ambition to become an army officer: Palani's son vows
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்