×

கேப்டன் கருணரத்னே அபார சதம்: முதல் இன்னிங்சில் இலங்கை ரன் குவிப்பு

காலே: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சைல், கேப்டன் திமத் கருணரத்னேவின் அபார சதத்தால் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன் குவித்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன் குவித்துள்ளது. பதும் நிசங்கா 56 ரன் (140 பந்து, 7 பவுண்டரி), ஒஷதா பெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ் தலா 3 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கருணரத்னே 132 ரன் (265 பந்து, 13 பவுண்டரி), தனஞ்ஜெயா டி சில்வா 56 ரன்னுடன் (77 பந்து, 5 பவுண்டரி) களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் 2, ஷனான் கேப்ரியல் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Captain Karunaratne ,Sri Lanka , El siglo gigantesco del capitán Karunaratne: la persecución de Sri Lanka en las primeras entradas
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!!