×

பாகிஸ்தான் கப்பலில் கதிர்வீச்சு பொருட்கள் குஜராத்தில் பறிமுதல்

காந்திநகர்: குஜராத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகருக்கு அனுப்பப்பட்ட கன்டெய்னர்கள் கப்பலில் வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் இந்த கன்டெய்னர்களை சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். தீங்கில்லாத பொருட்கள் அனுப்பப்படுவதாக குறிப்பிட்டிருந்த அந்த கன்டெய்னர்களை ஆய்வுக் கருவிகள் கொண்டு பரிசோதித்ததில் அதில் அபாயகரமான கதிரியக்க பொருட்கள் இருப்பதாக காட்டப்பட்டது.

இதனால், கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி பாகிஸ்தான் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், ‘கராச்சியில் உள்ள கே-2, கே-3 அணுமின் நிலையங்களுக்கான எரிபொருளை கன்டெய்னர்களில் சீனா அனுப்பியது. அதை எடுத்துக் கொண்டு காலி கன்டெய்னர்களை ஷாங்காய்க்கு அனுப்பினோம். காலியான கன்டெய்னர்கள் என்பதால் தீங்கில்லாத பொருளே இருப்பதாக குறிப்பிட்டோம்.அதில்,  கதிரியக்க பொருட்கள்  இருப்பதாக வந்த தகவலில் உண்மையில்லை’ என கூறி உள்ளனர்.


Tags : Gujarat , Pakistani ship, radioactive materials, confiscated
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...