×

ஜோலார்பேட்டை பகுதியில் கனமழை எதிரொலி 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது

* பொதுமக்கள் கடும் பாதிப்பு * தீயணைப்புத் துறையினர் படகில் சென்று மீட்பு

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் அரிப்பு ஏற்பட்டும், குடியிருப்புகளின் சுவர்கள் இடிந்து விழுந்தும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பாச்சல் ஊராட்சியில் என்ஜிஓ நகர், லட்சுமி நகர், தென்றல் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை பால்நாங்குப்பம், தாமலேரி முத்தூர், கட்டேரி ஆகிய கிராமங்களில் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீரானது திருப்பத்தூர் பெரிய ஏரி கால்வாய் வழியாக திருப்பத்தூர் பெரிய ஏரிக்கு சென்றடைகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி உள்ளதால் மழை நீரானது மேற்கண்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் முதியோர்கள் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வெளிவர முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்து நின்றதால் அப்பகுதியில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.சம்பத் குமார், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் பல்வேறு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்க திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் குடியிருப்புகளுக்குள் உள்ளே மாட்டிக் கொண்டிருந்த முதியவர்களை படகு மூலம் மீட்டு வெளியேற்றினர்.

மேலும் இதே போன்று கருப்பன் ஊராட்சியில் உள்ள பல்வேறு குடியிருப்புகள் என இரண்டு ஊராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நேற்று வெள்ளம் சூழ்ந்து பாதிப்புக்குள்ளானது. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்களை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அவர்கள் தங்குவதற்காக அசோக் நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியில் முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன் மூலம் குடியிருப்புகளின்றி பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இந்த முகாமில் தங்கவும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி தாலுகா கல்நார்சம்பட்டி கிழக்குமேடு பகுதி வழியாக பெரியகரம் செல்லும் மழைநீர் கால்வாய்  திடீரென உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள வயல் வெளியில் பாய்ந்தோடியது. இந்நிலையில் பெரியகரம் இளைஞர்கள் நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் மழை நீரில் உடைந்த கால்வாய் கரையை சரி செய்தனர்.


Tags : Jolarpettai , Jolarpettai: Heavy rains lashed various parts of Tirupati district causing floods.
× RELATED தி.மலை மக்களவை தொகுதிக்குட்பட்ட...