×

தொடர் மழையால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ‘புல்லா’ கொட்டுது தண்ணீர்-சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை

பட்டிவீரன்பட்டி : பெரும்பாறை, பில்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் இதனைச் சுற்றியுள்ள மலைக் கிராம பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும், இம்மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மலைப்பகுதியில் பல இடங்களில் ஊற்று தண்ணீர் சிறு அருவியாக விழுந்து கொண்டிருக்கின்றது. குடகனாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திண்டுக்கலுக்கு குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளவை எட்டியுள்ளது.

மேலும் அணையிலிருந்து தண்ணீர் மாறுகால் பாய்ந்து வருகின்றது. இதன் காரணமாக ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள 30 மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பியுள்ளன. மேலும் நீர்வரத்து அதிகரிப்பால் பல கண்மாய்கள் மாறுகால் பாய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சிடைந்துள்ளனர். சித்தரேவு, அய்யம்பாளையம், நெல்லூர், சித்தையன்கோட்டை பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல்நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாறை அருகேயுள்ள மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் அருவி உள்ளது. அருவி அமைந்துள்ள பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். மேலும் இந்த அருவிக்கு வரும் ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை என போலீசார் கூறுகின்றனர்.

Tags : Pullaveli , Pattiviranapatti: Perumparai, Billaveli, Manchalparappu, Kanalkadu, Tadiyankudisai, Kallanginaru and the surrounding hills.
× RELATED பிஎஸ்என்எல் டவர்களில் சோதனை ஓட்டம்