தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே தியேட்டரில் அனுமதிக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மார்க்கெட், திரையரங்கம், வணிக வளாகம், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானம், ஓட்டல்கள், தொழிற்சாலை உள்ளிட்ட பொது இடங்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். அவற்றை அந்தந்த உரிமையாளர்கள், பொது சுகாதாரத்துறை சட்டம் 1939 பிரிவின்படி உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே, உரிமையாளர்கள் அனுமதிக்கிறார்களா என்பதை அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களும் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: