×

ஆப்கானிஸ்தானில் 2 சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு; 9 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் 2 சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நேற்று நடந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். எந்நேரம் என்ன நடக்குமோ என்ற ஒருவித அச்சத்துடன் வாழ்க்கையை கழிக்கின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் நேற்று 2 வெடிகுண்டு தாக்குதல் நடத்தபட்டது. முதல் குண்டு டாஸ்த் இ பார்ஷி என்ற இடத்தில் வெடித்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயமடைந்தனர். மற்றொரு குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த  தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி டெபோரா லியோன்ஸ் கூறுகையில், இஸ்லாமிய அரசு-கொராசன், இப்போது கிட்டத்தட்ட அனைத்து ஆப்கானிஸ்தான் மாகாணங்களுக்கும் விரிவடைந்து வருவதாகவும், தலிபான்களால் அவற்றை தடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். “இஸ்லாமிய அரசு கொராசன் மாகாணத்தின் விரிவாக்கத்தை தடுக்க தலிபான்களின் இயலாமை முக்கிய எதிர்மறையான வளர்ச்சியாகும்” என்று ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது லியோன்ஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Afghanistan , In Afghanistan, 2 powerful, bombings; 9 people killed
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி