×

தொழில்நுட்பமும், தரவுகளும் புதிய ஆயுதங்களாக மாறிவரும் சகாப்தத்தின் காலத்தில் நாம் இருக்கிறோம்: சிட்னி உரையாடலில் பிரதமர் மோடி உரை

டெல்லி: ஜனநாயக நாடுகள் கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி சிட்னி உரையாடலில் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்க சிட்னி உரையாடலில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்தியாவின் தொழில்நுட்ப பரிணாமம் மற்றும் புரட்சி என்ற கருப்பொருளில் சிறப்புரை ஆற்றினார். இந்த உரைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிமுகக் குறிப்புகளை வழங்கினார். அவை எங்கள் இளைஞர்களைக் கெடுக்கக்கூடிய தவறான கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என உரையாற்றினார். தொழில்நுட்பமும், தரவுகளும் புதிய ஆயுதங்களாக மாறிவரும் சகாப்தத்தின் காலத்தில் நாம் இருக்கிறோம். ஜனநாயகம் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு அவசியமானது, அது தேசிய உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், வர்த்தகம், முதலீடு மற்றும் பொது நலன்களை ஊக்குவிக்க வேண்டும்.

உதாரணமாக கிரிப்டோகரன்சி  மற்றும் பிட்காயின் விஷயத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம், அது தவறான கைகளில் போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பேசினார். வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகிலும் இந்தியாவின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். டிஜிட்டல் யுகத்தின் நன்மைகளைக் குறிப்பிட்ட பிரதமர், கடல்-படுக்கையிலிருந்து சைபர் முதல் விண்வெளி வரையிலான பல்வேறு அச்சுறுத்தல்களில் உலகம் புதிய அபாயங்கள் மற்றும் புதிய வடிவிலான மோதல்களை எதிர்கொள்கிறது என்றும் கூறினார். ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் வெளிப்படையானது. அதே நேரத்தில், இந்த வெளிப்படைத்தன்மையை ஒரு சில சுயநலவாதிகள் தவறாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என பேசினார்.

Tags : Modi ,Sydney , Tamil Nadu Cabinet Meeting, 20th, change
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...