×

மொத்த மளிகை கடையில் ₹1.50 கோடி மோசடி 2 பெண்கள் சிக்கினர்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாரிமுனையை சேர்ந்த பாண்டி என்ற வியாபாரி புகார் அளித்தார். அதில் பாரிமுனையில் ‘வைரவேல் ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் மொத்த மளிகை கடை நடத்தி வருகிறேன். மதுரையை சேர்ந்த வேல்முருகனை நம்பி கடையின் முழு பொறுப்பையும் ஒப்படைத்ேதன். கடந்த 2015ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை அவரது பெயரில் புதிதாக வங்கி கணக்குக்கு  தொடங்கியும், அவரது மனைவி பூர்ணிமா, தம்பி செல்வகுமார், தம்பி மனைவி வினோதா ஆகியோருடன் சேர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் ₹1.50 கோடி வரை பணம் கையாடல் செய்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி 22ம் தேதி மத்திய வேல்முருகனை கைது செய்தனர். பின்னர் வேல்முருகனிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடிக்கு உடைந்தையாக இருந்த அவரது மனைவி  பூர்ணிமா, வினோதாவை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தேனியில் நேற்று முன்தினம் கைது செய்தனர். பிறகு 2 பேரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Total, grocery store, 1.50 crore, fraud
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...