×

பேரிடர் கால சிறப்பு மருத்துவ முகாம்: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு காய்ச்சல், இருமல், சளி உள்பட பல நோய்களால் அவதியடைந்தனர். இதையடுத்து, காஞ்சி தெற்கு மாவட்ட மதுராந்தகம் நகர திமுக சார்பில், உதயநிதி பிறந்தநாள் விழா மற்றும் பேரிடர் கால சிறப்பு மருத்துவ முகாம் மதுராந்தகம் வன்னியர்பேட்டையில் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தர், எம்பி ஜி.செல்வம் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கண், காது, மூக்கு, தொண்டை, சளி, இரும்பல், காய்ச்சல் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன் முத்துக்குமார், மதுராந்தகம் நகர செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் கோகுலகண்ணன், மதுராந்தகம் முன்னாள் நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், சத்யசாய், சாலவாக்கம் குமார், தம்பு, பொன்சிவகுமார், பேரூர் செயலாளர் உசேன், விஜயகணபதி, ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் சிவகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜாராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் நடந்த மருத்துவ முகாமை திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், சிறுதாவூர் ஊராட்சியில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி தொடங்கி வைத்தனர். இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களுக்கு மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டன.

Tags : Special Medical Camp ,MLA , Disaster Term Special Medical Camp: Initiated by MP, MLA
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...