×

மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குல்பூஷனுக்கு அனுமதி: பாக். நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

புதுடெல்லி: இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (51). தனது நாட்டில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் இவரை கைது செய்தது. இவருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த 2017ல் மரண தண்டனை விதித்தது. மேலும், அவரை கடந்த 2019ல் தூக்கில் போடுவதற்கும் ஏற்பாடுகளை செய்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு தடை விதித்தது. இதையடுத்து, ஜாதவ் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் தனது நாட்டு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை கடந்த ஜூலையில் பாகிஸ்தான் அரசு கொண்டு வந்தது.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதை நிறைவேற்ற முடியாமல் போனது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நேற்று மீண்டும் கூட்டப்பட்டது. அதில், ஜாதவுக்கு அனுமதி அளிப்பதற்கான ‘மறுபரிசீலனை மற்றும் மறுசீரமைப்பு மசோதா-2021’ தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு, ஜாதவுக்கு கிடைத்துள்ளது.

Tags : Kulbhushan ,Parliament , Permission for Kulbhushan to appeal against the death penalty: pak. The bill passed in Parliament
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...