×

நடமாடும் சித்த மருத்துவ முகாம் வாகனங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் வாகனங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மழை வெள்ளப்பாதிப்புகளுக்கு பிறகு வரக்கூடிய நோய்களுக்கு தமிழ்நாடு முழுவதுமாக 1560 இந்திய மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் டெங்கு மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்டம் தோறும் தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திற்கு 3 மருத்துவர்கள் என 50 வாகனங்கள் 15 மண்டலங்களுக்கு சென்றுள்ளது. 30லி கபசுரகுடிநீர் 30லி நிலவேம்பு குடிநீர். மழைக்கால நோய்களுக்கு தேவையான மருந்துகளும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யும் சிலர் ஒழுங்காக பணிக்கு வருவதில்லை பணி செய்வதில்லை. பேரிடர் காலத்தில் பணி செய்வது கடினம் தான். நாங்களும் குளிர்சாதன அறையில் இருந்து கொண்டு சொல்லவில்லை நாங்களும் தாம் உழைக்கின்றோம். நானே ஐ.சி.யு வார்டுகளுக்கு சென்றேன்... மழை கிராமங்களுக்கு சென்றுள்ளோம். பணி என்பது கடினம் தான் இருப்பினும் சிலர் சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்.. யாராக இருந்தாலும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. இது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்காது. பணி செய்யவில்லை என்றால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். மேலும் அகில இந்திய ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான நிறைவு பெற்றவுடன் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைகான கலந்தாய்வு நடைபெறும். 10.5% வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தடையில்லை எனவும் தெரிவித்தார்.

மே 7க்கு பிறகு 100க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் இரு மையங்களை முதல்வரே துவக்கி வைத்தார். கொரோனா காலத்தில் மிகப்பெரிய உதவியாக இருந்தது. அதே வகையில் டெங்கு மற்றும் மழைவெள்ள பாதிப்புக்கும் பணி செய்கிறார். டிசம்பர் இறுதிக்குள் சித்த மருத்துவ பல்கலை கழகத்தை முதல்வர் சென்னையில் துவக்கிவைப்பார் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கபசுர குடிநீர் தயார் செய்யும் இடத்தினையும் அமைச்சர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் அவருடன் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Minister ,Sidtha Medical Camp ,Subramanian , மா.சுப்பிரமணியன்
× RELATED மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார்...