×

தாசில்தாரின் கார் மோதி வாலிபர் பலி

திருவெறும்பூர்: திருச்சி கலெக்டர் அலுவலக வரவேற்பு தாசில்தாரின் கார் டிரைவராக இருப்பவர் மருங்காபுரியை சேர்ந்த புஷ்பராஜ்(45). இவர் மட்டும் நேற்று காலை அரசு வழங்கிய தாசில்தாருக்கான காரில் திருச்சியில் இருந்து விராலிமலை சென்று கொண்டிருந்தார். மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி எதிர்பக்க சாலைக்கு சென்றது.

அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் கார் மோதி, அதில் வந்த மட்டப்பாறைபட்டியை சேர்ந்த தனபால் (37), மணி(43) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் தனபால் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பொதுமக்கள் டிரைவரை பிடித்து மணிகண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post தாசில்தாரின் கார் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Thiruverumpur ,Pushparaj ,Marungapuri ,Trichy Collector's Office Reception Tahsildar ,Viralimalai ,Trichy ,Manikandam panchayat ,Dinakaran ,