×

பந்தலூர் பகுதியில் ஆபத்தான மரங்களை வெட்டும் பணி தீவிரம்

பந்தலூர்:  பந்தலூர் அருகே சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை வெட்டும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் சாலையோர மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்து ஆபத்தான மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளான ஏலமன்னா, கொளப்பள்ளி, பிதர்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.  இந்நிலையில், ஏலமன்னா பகுதியில் குடியிருப்பு அருகே ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி நேரில் ஆய்வு செய்தார்.  சம்மந்தப்பட்ட துறையினருக்கு ஆபத்தான மரங்களை விரைவில் வெட்டி அகற்றுமாறு அறிவுறுத்தினார்.

Tags : Pandharpur , Pandhalur
× RELATED பந்தலூர் பஜாரில் சாலையில்...