×

நடிகர் பிரகாஷ்ராஜ் மவுன விரதம்

ெசன்னை: தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். சில நாட்களுக்கு முன்பு அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், அவரது குரல்வளைக்கு சிறிது ஓய்வு தேவை என்று அறிவுறுத்தினர். இதுகுறித்து நேற்று முன்தினம் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘டாக்டர்கள் எனக்கு முழுமையான பரிசோதனை நடத்தினர். தற்போது நான் நலமாக இருக்கிறேன். ஆனால், என் குரல்வளைக்கு மட்டும் சற்று ஓய்வு தேவைப்படுகிறது. அதாவது, ஒரு வார காலத்திற்கு. அதனால்தான் மவுன விரதம். மவுனமாக இருக்கப்போகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Prakashraj , Actor Prakashraj, Silent Fasting
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்