×

கடலூரில் போலீஸ்காரர் தற்கொலை

கடலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பூபதி மகன் பிரபாகரன் (33). இவர் கடலூர் ஆயுதப்படை போலீசில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர், தனது குடும்பத்துடன் கடலூர் ஆயுதப்படை போலீசார் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முதற்கட்ட  விசாரணையில், சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சரியாகாததால், பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


Tags : Cadalur , Policeman commits suicide in Cuddalore
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை