×

யூடியூப் மூலம் ரூ.5 கோடி மோசடி

கோவை: கோவை இருகூரை சேர்ந்த சரளாதேவி மற்றும் கோதை நாச்சியார் ஆகிய இருவரும் சேர்ந்து ‘சர்வ லட்சுமி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கினர். இவர்கள் பெண்களுக்கு சுயதொழில் பெற்றுத்தருவதாக யூடியூப் சேனல் மூலம் விளம்பரம் செய்தனர். சுயதொழில் பெற்றுத்தர கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அதில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். இதனை நம்பி கோவை, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணத்தை ஆன்லைன் மூலமாக அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு அனுப்பினர்.

ஆனால், பணத்தை கொடுத்து நீண்ட நாட்களாகியும் பெண்களுக்கான சுயதொழில் சம்பந்தமான எந்த ஒரு தகவல்களையும் அவர்கள் தெரிவிக்காமல் மோசடி செய்தனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ரூ.5 கோடிக்கு மேல் மோசடி நடந்து இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.



Tags : YouTube , 5 Cody Fraud Rs
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்