×

பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் 33.92 அடி உயரத்துக்க நீர் இருப்பு உள்ளது. மேலும், தற்போது 2798 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் ஆந்திர மாநிலம்,  அம்மம்பள்ளி அணை உபரி நீர், கேசாவரம் அணைக்கட்டில் இருந்து வரும் உபரி நீர் என 21 ஆயிரம் கனஅடி என நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.

இதனால் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து 18 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், நீர்வரத்து வினாடிக்கு 6087 கனஅடியாக குறைந்தது. இதனால் நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று வினாடிக்கு 6087 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.



Tags : Burundi Lake , Boondi Lake, overflow opening, cubic feet, reduction
× RELATED பூண்டி ஏரியில் இருந்து கொற்றலை...