×

இருசக்கர வாகன திருடர்களை விரட்டிப் பிடித்த சூலூர் ஆய்வாளர்; ஒருவர் பிடிபட்ட நிலையில் மற்றோருவர் தப்பியோட்டம்..!

சூலூர்: சூலூர் அருகே நீலம்பூர் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில்  வந்த  திருடர்களை இரவு ரோந்தின் போது சூலூர் ஆய்வாளர் விரட்டிப் பிடித்தார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தை துரத்தி ஓடி விரட்டிப் பிடித்தார் . அவரிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒருவர் பிடிபட்டார் மற்றொருவர் தப்பியோடினார் அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சூலூர் வட்ட ஆய்வாளர் மாதையன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது நீலம்பூர் எல்என்டி பைபாஸ் சாலையில் சந்தேகத்துக்கிடமான இருவர் நின்று இருப்பது தெரியவந்தது அவர்களிடம் எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என கேட்டபோது திடீரென ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தப்பிச் சென்றனர்.

தப்பியோடியவரை ரோந்து வாகனத்தில் துரத்திச் சென்றபோது முதலிபாளையம் பிரிவு அருகே இருசக்கர  வாகனத்தை போட்டுவிட்டு சாலையில் தப்பியோட முயற்சி செய்தனர் அப்போது ஆய்வாளர் மாதையன் ரோந்து வாகனத்தில் இருந்து இறங்கி  சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி  விரட்டி பிடித்தார். கட்டிப் புரண்ட இரு சக்கர வாகன திருடர்களுடன் போராடியதில் அவரது சீருடை கிழிந்தது. இருந்தாலும் விடாமல் இருசக்கர வாகன திருடர்களை பிடித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசாரின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் அவரை சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். இந்த சம்பவத்தின்போது தப்பியோடிய மற்றொரு வாகன திருடனை தேடி வருகின்றனர்.

போலீசிடம் சிக்கிய நபரிடம் விசாரித்தபோது அவர் ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பா நகரைச் சேர்ந்த பழனியப்பன் மகன் ஹரிஹரசுதன் (23). எனத் தெரியவந்தது இவர் கோவை பகுதியில் கூலி வேலை செய்து வருவதாக கூறினார். மேலும் தப்பியோடிய அவர் சென்னையை சேர்ந்த சங்கர் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் கோவை  பகுதியில் தங்கியிருந்து வந்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு ஸ்ப்ளெண்டர் பிளஸ் வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. தப்பியோடிய இருசக்கர வாகன திருடர்களை துரத்திப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sulur , Sulur investigator who chased down two-wheeler thieves; One was caught and the other escaped ..!
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி