×

கொரோனாவைத் தொடர்ந்து டெங்கு பாதித்தவருக்கும் கருப்பு பூஞ்சை தாக்குதல்

புதுடெல்லி: கொரோனா 2ம் அலையின் போது, தொற்றிலிருந்து மீண்ட பலருக்கும் அரிய நோயான மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. கண், மூளை உள்ளிட்ட உடல் பாகங்களில் நல்ல திசுக்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சையால் பலரும் கண் பார்வை இழந்தனர், உயிரும் இழந்தனர். இந்நிலையில், டெங்குவில் இருந்து குணமான ஒருவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த 49 வயது ஆண் நோயாளி ஒருவர், டெங்கு பாதிப்பில் இரு ந்து குணமடைந்த 15 நாட்களில் ஒற்றை கண் பார்வையை இழந்துள்ளார். மருத்துவமனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டெங்குவுக்கு பிறகு கருப்பு பூஞ்சை ஏற்படுவது மிக அரிதான ஒன்றென டாக்டர்கள் கூறி உள்ளனர்.

Tags : Corona, persistent, dengue, black fungus
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...