×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார். பின்னர்  கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.  தற்போது கடலூர் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்தார். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடந்த 6 நாட்களாக வெள்ளப்பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.

தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய வந்துள்ளார். முதலில் அவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடிய பின்னர் கலப்பாதிப்புகளையும் அவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரவன உதவிகளையும் அவர் கேட்டறிந்தார். இதனை தொடந்து, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, என டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பயணித்து வெள்ள சேத பாதிப்புகளையும், பயிர் சேத பாதிப்புகளையும் விவசாயிகளிடம் இருந்து கேட்டறிகிறார். அந்த பதிப்பின் தன்மையை அவர் நேரில் பார்வையிடுகிறார்.


கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த மழை சேத பாதிப்புகளை பார்வையிட தற்போது குறிஞ்சிப்பாடி வட்டம் அரங்கமங்கலம் என என்ற ஊராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார்.

கடலூர் மாவட்டத்தை பொறுத்த வரை பயிர் சேத பாதிப்புகள் என்பது இந்த மழைக்கு குறைவாகவே இருந்தது. ஏனெனில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடலூர் மாவட்டத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது சென்னை அருகே கரையை கடந்தால் மழை குறைவான அளவிலேயே பெய்தது. இதனால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


Tags : First Minister of India ,Kadalur district ,Q. Stalin , Cuddalore District, Heavy rains, vulnerabilities, Chief Minister MK Stalin
× RELATED தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக்...