×

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் 15ம் தேதி நடை திறப்பு: பம்பையில் நீராட அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை  ஐயப்பன்  கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 15ம் தேதி மாலை நடை  திறக்கப்படுகிறது. அன்று  வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.  மாலையில் புதிய மேல்சாந்திகள்  பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 16ம்  தேதி முதல் மண்டல கால பூஜைகள்  தொடங்கும். அன்று முதல் தினமும் 25 ஆயிரம்  பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு  ெசய்யும் பக்தர்கள் வராமல் இருந்தால்  உடனே முன்பதிவு செய்யாத பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக  நிலக்கல் பகுதியில் முன்பதிவு மையம்  அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடமும்  பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிலக்கல்  பகுதியில் தான் நிறுத்த வேண்டும். சன்னிதானத்தில் தங்க அனுமதியில்லை. 10 வயதுக்கு குறைவான குழந்தைகள்,  60  வயதுக்கு மேலானவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். பெண்களை அனுமதிப்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. பக்தர்கள் தினமும் காலை முதல் பகல் 12 மணிவரை நெய்யபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் இதுபோல், பம்பையில் பக்தர்கள் குளிக்கவும் அனுமதிக்கப்பட உள்ளனர்.



Tags : Sabarimala Temple ,Bombay , Opening on the 15th at Sabarimala Temple for Mandala and Capricorn Lantern Puja: Permission to bathe in Bombay
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்